Showing posts with label Other Tricks. Show all posts
Showing posts with label Other Tricks. Show all posts

Saturday, 15 April 2017

What is PAN and what you need to know about it ?????


பான் கார்டு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

சென்னை: இந்தியாவில் தற்போது ஏராளமானோர் பான் (பெர்மனன்ட் அகௌண்ட் நம்பர்) கார்டு வைத்துள்ளனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பான் கார்டின் முக்கியத்துவமும் அதன் பயன்பாடும் தெரிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே. எனவே பான் கார்டின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது நல்லது.
பான் என்றால் என்ன?
பான் என்றால் இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்களாகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும் கலந்து இருக்கும். இந்த பான் எண்கள், ஒரு கார்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பான் கார்டு என்கிறோம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு இந்த பான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
பான் கார்டின் முக்கியத்துவம்
ஒருவரின் வங்கி நடவடிக்கைகளை, அதாவது அவருடைய வரி கட்டுதல், டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் கிரெடிட்டுகள், அவருடைய வரி சேமிப்பு, சொத்து, அன்பளிப்பு மற்றும் எப்பிடி போன்றவற்றை அவர் வைத்திருக்கும் பான் கார்டு வருமான வரித் துறைக்குத் தெரிவித்துவிடும். எனவே இந்த பான் கார்டின் உதவியுடன் வருமானத் துறை ஒரு இந்திய குடிமகனின் வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை மிக எளிதாகத் தெரிந்து கொள்ளும்.
பான் எண்களை எளிதாக தெரிந்து கொள்ள
எடுத்துக்காட்டாக ஒருவருடைய பான் எண்கள் ஏஎஃப்இசட்பிகே7190கே (AFZPK7190K) என்று வைத்துக் கொள்வோம்.
இதில் இருக்கும் முதல் மூன்று எண்கள் ஆங்கில எழுத்துக்களான ஏ முதல் இசட் வரையிலான எழுத்துக்களிலிருந்து கொடுக்கப்படும் 3 எழுத்துக்களாகும்.
நான்காவது எழுத்து எப்போதுமே பான் கார்டை வைத்திருப்பவரின் நிலையைக் குறிக்கும். பி என்று கொடுக்கப்பட்டுள்ளதால் அது ஒரு தனி நபரைக் குறிக்கிறது. ஒரு வேளை எஃப் என்று கொடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு ஃபர்மை குறைக்கும். அல்லது சி என்று குறிப்பிட்டிருந்தால் அது ஒரு கம்பெனியைக் குறிக்கும். ஹெச் என்று குறிக்கப்பட்டிருந்தால் அது இந்து கூட்டு குடும்பத்தை குறிக்கும். ஏ என்று இருந்தால் அது ஒரு ஏஓபியைக் குறிக்கும். டி என்று இருந்தால் அது ஒரு ட்ரஸ்டைக் குறிக்கும்.
ஐந்தாவது எண்ணான கே, பான் அட்டையை வைத்திருப்பவரின் இறுதிப் பெயர் அல்லது அவருடைய பட்டப் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும்.
அடுத்த நான்கு எண்கள் 0001 முதல் 9999 வரையிலான எண்களுக்குள் இருக்கும் வரிசை எண்களாகும்.
இறுதி எண்ணான கே, ஆங்கில எழுத்தில் இருக்கிறது. இது ஒரு சோதனை இலக்க எண்ணாகும்.
பான் கார்டு முக்கியமா?
ஆம். பான் கார்டு மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடைய எல்லா பொருளாதார வங்கி நடவடிக்கைகளிலும் இந்த பான் எண்களைக் குறிப்பிட வேண்டும் என்பது அவசியம் என்று வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது.
பான் கார்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?
பான் கார்டைப் பெற படிவம் 49ஐ நிரப்பி, விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிவம் 49ஐ, வருமான வரித் துறை அல்லது யுடிஐஐஎஸ்எல் அல்லது என்எஸ்டிஎல் ஆகியவற்றின் இணைய தளங்களான www.incometaxindia.gov.inwww.utiisl.co.in or tin-nsdl.com ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த படிவம் 49ஐ, ஐடி பான் சேவை மையங்கள் மற்றும் டிஐஎன் பெசிலிடேஷன் மையங்கள் போன்றவற்றிலும் கிடைக்கும்.
மேலே சொல்லப்பட்ட இணையதளங்களுக்கு சென்று பான் நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே பான் கார்டு வைத்திருந்தால் www.https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்திற்கு சென்ற உங்களது பான் கார்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
பான் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ்
2. மெட்ரிகுலேஷன் சான்றிதழ்
3. கல்லூரி சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு அறிக்கை
5. கிரெடிட் கார்ட் அறிக்கை
6. வங்கி பாஸ்புக் அறிக்கை
7. தண்ணீர் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
8. ரேஷன் அட்டை
9. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
10. பாஸ்போர்ட்
11. வாக்காளர் அடையாள அட்டை
12. ஓட்டுனர் உரிம அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.
வாழ்விடத்திற்கான சான்றுகள்
1. மின் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
2. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
3. வங்கிக் கணக்கு அறிக்கை
4. கிரெடிட் கார்டு அறிக்கை
5. வங்கி பாஸ்புக் அறிக்கை
6. வீட்டு வாடகை செலுத்தியதற்கான ரசீது
7. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் சான்று
8. பாஸ்போர்ட்
9. வாக்காளர் அடையாள அட்டை
10. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
11. ஓட்டுநர் உரிம அட்டை
12. ரேஷன் அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.
விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் மேற்கூறிய சான்றுகளோடு அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.




தங்களுக்கு என தனி விளம்பர பலகை தயார் செய்வது எப்படி?


நாம் அனைவருக்குமே....விளம்பரம் என்பது முக்கிய ஒன்றாக இருக்கிறது....தங்கள் கருத்துகள், செய்திகள்,படைப்புகள் போன்றவற்றை மக்களிடையே தெறிவுப்படுத்த பிரபலபடுத்த விளம்பரங்கள் பயன்படுகின்றன்.....முக்கியமாக தங்கள் பிளாக்குகள் , வலைதளம், பதிவிகளை பிரபலப்படுத்த...பயன்யுள்ளதாக...இருக்கும். எப்படி என்று இப்போ காணலாம்...


இலவச விளம்பர பலகை தயார் செய்ய பல இணைய தளங்கள் செயல்பட்டாலும்....மிகவும்...அருமையான...செயல்பாட்டினை வெளிப்படுத்துகிறது....இரண்டு தளங்கள்.


BannerSnack

                                ஒன்று BannerSnack என்னும் தளம்....மிகவும் அருமையான செயல்பட்டினை வழங்குகிறது....இத்தளத்தில் தாங்கள் முதலில் உறுப்பினராகி கொள்ளவேண்டும்..பின்னர்...இதன் பயனை பெறலாம்..மிகவும் சிறந்த...தரத்தில் விளம்பர பலகையை தயார் செய்யலாம்...
இங்கு உடனடி PREVIEW யும் காணலாம். மேலும் இங்கு பொத்தான்களையும் (BUTTON)தயார்செய்யலாம்...
பல EFFECTSயும் தங்கள் பயன்படுத்தலாம்...நான் மிகவும் அசந்த தளம் இது...இலவச சேவையை மிக அருமையாக....வழங்குகிறது இதன் சிறப்பு...
இத்தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்: BannerSnack
Flashvortex

Flashvortex இத்தளமும் சிறப்பான செயலைபாட்டினை வழங்குகிறது....மிக அருமையாக...விரைவாக வழங்குவது இதன் சிறப்பு....தங்களுக்கென பல மாடல்களை அவற்களே தருகிறார்கள் அவற்றில் தாங்களுக்கு பிடித்ததை தாங்களுக்கு ஏற்றது போல மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் பயன்தரும் வகையில்...இங்கு தாங்கள் கடிகாரங்கள்(CLOCKS),பட்டன்கள்(BUTTONS),சைடு பார்..(SIDE BAR)என பல சேவைகளை வழங்குகிறது,.....



visit sites:

youtube channel: https://youtu.be/rx5bWE4nrv4

blogspot:  https://www.neelhackers.blogspot.com

Subscribtion Link: https://www.youtube.com/channel/UCXx_5-Y-kN7nnSgtHieXPvQ?sub_confirmation=1


புதிய தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் computer technology சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்..



Friday, 14 April 2017

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.


978-728-9918 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.
எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:
TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை
நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155

visit sites:

youtube channel: https://youtu.be/rx5bWE4nrv4

blogspot:  https://www.neelhackers.blogspot.com

Subscribtion Link: https://www.youtube.com/channel/UCXx_5-Y-kN7nnSgtHieXPvQ?sub_confirmation=1

Send Anywhere - உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் எவ்வளவு பெரிய கோப்புக்களையும் பகிர உதவும் செயலி

புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் போன்ற எந்த ஒரு கோப்புக்களையும் ஒரு சாதனத்தில் இருந்து இன்னுமொரு சாதனத்துக்கு பகிர்ந்துகொள்ளு...