Tuesday, 18 April 2017

விண்டோஸ் 7 ல் போல்டர்களை மறைக்க, மீட்க வழிமுறைகள்…!!!!!!!!

 

விண்டோஸ் 7 கம்பூட்டர்களில் போல்டர் அல்லது கோப்புகளை மறைக்கும் வழிமுறை: 
  • விண்டோஸ் 7 கம்ப்யூட்டிரில் மறைக்கப்பட வேண்டிய கோப்பு அல்லது போல்டரின் மீது ரைக் கிளிக் செய்து properties என்பதைக் கிளிக் செய்யவும்.
  • தோன்றும் விண்டோவில் Hidden என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் டிக் மார்க்கை ஏற்படுத்தவும்.
  • ஓ.கே கொடுத்து வெளியேறவும்.
  • நீங்கள் தேரந்தெடுத்த கோப்பு அல்லது கோப்புறை மறைந்திருக்கும் (hide).
அவ்வளவுதான் நீங்கள் மறைக்க விரும்பிய கோப்பு அல்லது கோப்புறை மறைக்கப்பட்டுவிடும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5Rfrq1qarAK-NZZtWGZ-qL3fqdBgpPNo3q9SUXyUscGznCf5nylNeAvymPy7UsQr-Aa3NxOP_h5DZTblJi8gndhnlmvB3MfXZCBHb6L4G7DVMpPSIrTnTtOzqgn6yubWn8dFG7xyqw8OY/s1600/hide-files-easily+copy.jpg
சோதனை செய்முறை: 
  1. உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு காலியான இடத்தில் சுட்டெலியை (Mouse) வைத்து வலச்சொடுக்கு செய்திடுக (Right click).
  2. தோன்றும் பெட்டியில் New==>Folder என்பதை கிளிக் செய்க.
  3. போல்டரின் பெயராக Hide folder என பெயரிடுக.அல்லது உங்களுக்கு விருப்பமான பெயரினை இடுக.
  4. இப்பொழுது புதிய போல்டர் உருவாகியிருக்கும்.
  5. இனி அந்த போல்டரின் மீது மௌஸ் வைத்து ரைட்கிளிக் செய்திடுக.
  6. தோன்றும் பெட்டியில் properties என்பதை கிளிக் செய்திடுக.
  7. அடுத்து தோன்றும் பெட்டியில் Attributes என்பதில் Hidden என்பதில் டிக்மார்க் ஏற்படுத்திடுக.
  8. இறுதியில் apply, OK கொடுத்து வெளியேறுக..




விண்டோஸ் 7 ல் மறைத்து வைக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் காட்சிக்கு கொண்டுவரும் வழிமுறைகள்:
விண்டோஸ் 7 கணனியில் hide செய்யப்பட்ட கோப்புகளை மீண்டும் காணுவதற்கான வழிமுறைகள் கீழே.
முதலில் உங்கள் கணினியில் போல்டர் ஆப்சனை திறக்க வேண்டும். Folder Options திறப்பதற்கு,
1. start button அழுத்துங்கள்.
2. கண்ட்ரோல் பேனல் கிளிக் செய்யுங்கள்.
3. Appearance and Personalization ஐ கிளிக் செய்யுங்கள்.
4. அங்கே  Folder Options என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. View என்ற டேபை கிளிக் செய்யுங்கள்.
6. settings என்பதற்கு கீழாக Show hidden files, folders, and drives என இருக்கும்.
7. அதில் டிக் மார்க்கை ஏற்படுத்துங்கள்…
முடிந்தது.. இனி நீங்கள் மறைத்து வைத்திருந்த (Hide) அனைத்து போல்டர்களும், கோப்புகளும் உங்களுக்கு தெரியும்.

No comments:

Post a Comment

Send Anywhere - உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் எவ்வளவு பெரிய கோப்புக்களையும் பகிர உதவும் செயலி

புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் போன்ற எந்த ஒரு கோப்புக்களையும் ஒரு சாதனத்தில் இருந்து இன்னுமொரு சாதனத்துக்கு பகிர்ந்துகொள்ளு...