Saturday, 15 April 2017

புதிய கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட பயன்படும் இணையதளம்


பேச்சு வழக்கு:
புதிய கம்ப்யூட்டரோ, பழைய கம்ப்யூட்டரோ... எதுவாக இருந்தாலும், அதில் உங்களுக்கு பயன்படும் புரோகிராமை இன்ஸ்டால் செய்யணும்னா நீங்க கண்டிப்பா டவுன்லோட் பண்ணிட்டு, அதை மீண்டும் இன்ஸ்டால் செய்வீங்க...

டவுன்லோடும் வேண்டாம்.. இன்ஸ்டாலும் வேண்டாம்.. அதை ஒரு வெப்சைட்டே பார்த்துக்குது....

உங்களோட வேலைகள் எல்லாத்தையும் மிச்சம் பண்ணி, உங்க கம்ப்யூட்டர்ல தேவையான புரோகிராமை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுது ஒரு இணையதளம்.

நினைட்.காம் வெப்சைட்ல போய் உங்களுக்கு தேவையான புரோகிராமை டிக் அடிச்சிட்டு கடைசியில இருக்கிற Get Installer பட்டனை அமுக்கினா போதும்.

உடனே ஒரு இஎக்இ பைல் டவுன்லோட் ஆகும். அதை ஓப்பன் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க போதும்.

அந்த வெப்சைட்ல நீங்க என்னென்ன புரோகிராம் தேர்ந்தெடுத்தீங்களோ, அதை எல்லாத்தையும் இந்த இன்ஸ்டாலர் உங்களோட கம்ப்யூட்டர்ல டவுன்லோட்  செய்து இன்ஸ்டாலும் செய்துடும்.

புது வெர்சனா அப்டேட்டிவ் சாப்ட்வேரா பார்த்து இன்ஸ்டால் செய்யும். இது நமக்கு ரொம்ப கெயினா இருக்கும்.

இலவசமான சாப்ட்வேர் கூட வர்ற டூல்ஸ், வைரஸ் இன்ன பிற வகையறாக்களை எல்லாம் ஓரங்கட்டிட்டு பியூரா என்ன சாப்ட்வேர் புரோகிராம் தேவையோ அதை மட்டும் இன்ஸ்டால் பண்ணுது...

இதுதான் இந்த வெப்சைட்டோட சிறப்பம் - ஸ்பெஷாலிட்டி.

யூஸ் பண்ணி பாருங்க... கண்டிப்பா யூஸ்புல்லா இருக்கும். சந்தேகமில்லை.

தமிழில்: 

நீங்கள் புதியதாக வாங்கிய கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட  பயன்படும் ஒரு பயன்மிக்க இணையதளம் நினைட். 

இந்த தளத்தில் சென்று, உங்களுக்குத் தேவையான புரோகிராம்களை தேர்ந்தெடுத்து "Get Installer" என்பதை கிளிக் செய்திட வேண்டும்.
ninite-program-installer-for-computer

உடனே உங்கள் கம்ப்யூட்டிரில் .exe பைல் தரவிறங்கும். அதை திறந்து இயக்கினால், நீங்கள் தேர்ந்தெடுத்த புரோகிராம்கள் டவுன்லோட் ஆகி இன்ஸ்டால் செய்யப்படும். 

புதியவர்களுக்கு இந்த தளம் மிக பயனுள்ளதாக இருக்கும். புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட மிகவும் நம்பகமான இணையதளம்

புரோகிராம் தரவிறக்கி இன்ஸ்டாலும் செய்து கொடுக்கும் இந்த தளம் உண்மையிலேயே ஆச்சர்யமிக்கதுதான்.

இணையதளத்திற்கான சுட்டி: www.ninite.com

பயன்படுத்திப் பாருங்கள். கருத்துகளை கூறுங்கள்.



visit sites:




புதிய தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் computer technology சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்..


No comments:

Post a Comment

Send Anywhere - உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் எவ்வளவு பெரிய கோப்புக்களையும் பகிர உதவும் செயலி

புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் போன்ற எந்த ஒரு கோப்புக்களையும் ஒரு சாதனத்தில் இருந்து இன்னுமொரு சாதனத்துக்கு பகிர்ந்துகொள்ளு...