இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே.
மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.
இத்தகையப் பயன்மிக்க பென்டிரைவ்(pendrive) அல்லது மெமரிகார்ட்(memory card) போன்ற ரீமூவபிள் டிவைஸ்களை நாம் பயன்படுத்தும்பொழுது சில சமயம் cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk என்பன போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும்.
உடனே என்னவோ ஏதோவென்று, பதறாதீர்கள். இவ்வாறான பிழைச் செய்திகளை(Error) வருவதற்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களே(Virus Program) காரணமாக இருக்கும்.
இதுபோன்ற பிழைச்செய்திகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry கோப்பில் வைரஸ்கள் 'கை' வைப்பதுதான். அதனாலேயே பெரும்பாலான பிழைச்செய்திகள் இவ்வாறு தோன்றும்.
சரி.. write protected பிழைச் செய்தி காட்டினால் என்ன செய்வது? அதற்கான தீர்வுதான் என்ன? என்கிறீர்களா?
இதோ தீர்வு..
- உங்களுடைய கணினியில் Start பட்டன் அழுத்துங்கள்.
- Run விண்டோவை திறவுங்கள்.
- அதில்
reg add "HKLM\System\CurrentcontrolSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /vWriteProtect /f/d 0
என கொடுத்து ok பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவுதான். இப்பொழுது உங்களுடைய கணினியில் உள்ள பென் டிரைவை எடுத்துவிட்டு மீண்டும் கணினியில் இணைத்து புணிபுரியத் தொடங்கலாம். இப்பொழுது Write Protected பிழைச்செய்தி தோன்றாது.
youtube channel: https://youtu.be/rx5bWE4nrv4
blogspot: https://www.neelhackers.blogspot.com
Subscribtion Link: https://www.youtube.com/channel/UCXx_5-Y-kN7nnSgtHieXPvQ?sub_confirmation=1
No comments:
Post a Comment