முதலில் டோரன்ட் என்றால் என்னவென்று கூறிவிடுகிறேன், இதைப்பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. டோரன்ட் என்பது மென்பொருள்கள், திரைபடங்கள், விளையாட்டுமென்பொருள்கள், மின்னனு புத்தகங்கள், கோப்புகள் மற்றும் பல்வேறு தகவல்களை யாருடைய அனுமதி இன்றியும் தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் ஒரு எளிய வழிமுறை ஆகும். நாம் எவ்வாறு இணையத்தில் தகவல்களை தேட கூகுள் தளத்தினை நாடுகின்றோமோ அதைபோல் டோரன்ட் பைல்களை தேட நாம் செல்ல வேண்டியது Torrentz தளமாகும். இந்த தளத்தில் அனைத்து வித டோரன்ட்களுக்கும் இணைப்பு நிச்சயம் இருக்கும்.
சரி டோரன்ட் பைல் என்பது KB அளவில் இருக்கும். இதை கொண்டு எவ்வாறு முழுகோப்பினையும் பதிவிறக்கம் செய்வது என்றால் அதற்கும் சில மென்பொருள்கள் உள்ளது அதில் புகழ்பெற்ற மென்பொருள்கள் UTorrent, Bittorrent ஆகியவை ஆகும். இந்த மென்பொருள்கள் உதவியுடன் கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் போது பதிவிறக்கத்தின் வேகம் சற்று குறைவாக இருக்கும்.
சரி, டோரன்ட்களை கொண்டு முழுகோப்புகளையும் தரவிறக்கம் செய்ய மாற்று வழி உண்டா என்றால் நிச்சயம் இருக்கிறது. டவுண்லோட் மேனேஜர்களின் உதவியுடன் அதிவேகமாக டோரன்ட் முழுகோப்புகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு சில இணைய மையங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த டோரன்ட் கோப்புகளை தரவிறக்கம் செய்ய தடை செய்து இருப்பார்கள். அந்த தடையை உடைத்து டோரன்ட் முழுக்கோப்புகளையும் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பற்றியும் இந்தக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

முதலில் டோரன்ட் தேடுதளத்தில் குறிப்பிட்ட டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்யவும்.
Torrentz தளத்திற்கான சுட்டி
Torrentz தளம் சென்று வேண்டிய டோரன்ட் பைலை தேடி பெறவும். சான்றாக நான் Autocad 2008 யை டவுண்லோட் செய்ய டோரன்ட் பைலை தேடினேன். அதற்கான டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்ய Torrentz தளம் சென்று Autocad 2008 என்று உள்ளிட்டு தேடினேன், அதில் பல்வேறு Autocad 2008 கான டோரன்ட்களுக்கான இணைப்பு கிடைத்தது. அதில் rating , peers அதிகம் உள்ள டோரன்ட் இணைப்பினை தேர்வு செய்யவும். இவ்வாறு தேர்வு செய்வதனால தரவிறக்கத்தின் வேகம் அதிகம் ஆகும்.
அடுத்து நீங்கள் தேர்வு செய்த டோரன்ட் பைல் இருக்ககூடிய அனைத்து முகவரியும் காட்டும். அதில் விருப்பமான ஒன்றை தேர்வு செய்யவும்.
பின் டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்கும். அதை பயன்படுத்தி டோரன்ட் பைலை தரவிறக்கி கொள்ளவும்.
அடுத்து நாம் செய்ய வேண்டியது டவுண்லோட் மேனேஜரை கணினியில் நிறுவ வேண்டும். புகழ்பெற்ற டவுண்லோட் மேனேஜர்களில் ஒன்று இண்டர்நெட் டவுண்லோட் மேனேஜர் (IDM) ஆகும். ஏற்கனவே உங்கள் கணினியில் இருந்தால் அப்படியே விட்டு விடவும். இல்லையெனில் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
IDM தரவிரக்கம் செய்ய சுட்டி
அடுத்து செய்ய வேண்டியது zbigz தளம் சென்று டோரன்ட் பைலை பதிவேற்றம் செய்து பதிவிறக்க சுட்டி பெற வேண்டியது மட்டுமே ஆகும்..
தளத்திற்கான சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இலவச பயனர் கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் Upload torrent file என்னும் பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட டோரன்ட் பைலை தேர்வு செய்து Go பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் கழித்து தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும். Download என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் விண்டோவில் Free எனும் இணைப்பினை அழுத்தவும். அதன் பின் நேரிடையாக இண்டர்நெட் டவுண்லோட் மேனேஜரில் பதிவிறக்கம் ஆகும்.
வழக்கம்போல் பதிவிறக்கம் முடிந்தவுடன் குறிப்பிட்ட பைலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
visit sites:
youtube channel: https://youtu.be/rx5bWE4nrv4
blogspot: https://www.neelhackers.blogspot.com
Subscribtion Link: https://www.youtube.com/channel/UCXx_5-Y-kN7nnSgtHieXPvQ?sub_confirmation=1
No comments:
Post a Comment