எமது இணையத்தளத்திட்கு அதிகமான ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள்
வருகை தரத்தொடங்கி விட்டதால், எமது பதிவுகள் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கும் உதவும் வகையில் அமைய வேண்டும். ஆகவே இன்றைய பதிவு அன்றொஇட் ஸ்மார்ட் போன் பாவனையாலர்களுக்கனது. இன்றைய பதிவில் அன்றொஇட் ஸ்மார்ட் போனுக்கான அருமையான ஒரு உபாயத்தை கூறவிருக்கிறேன்.
அன்றொஇட் ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் நாங்கள் எமது ஸ்மார்ட் போனிலே இருக்கும் எமது தனிப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ-களை மறைத்து வைப்பதற்காக ஏதேனும் ஒரு லாக்கர் செயலியை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஆனால் யாரேனும் எமது ஸ்மார்ட் போனை எடுத்து பார்த்தால் லாக்கர் செயலி ஒன்று நிறுவப்பட்டிருப்பது தெரியவரும்.
ஆகவே இன்றைய பதிவில் எந்த விதமான செயலிகளின் உதவியுமின்றி எமது ஸ்மார்ட் போன் Gallery-யில் இருக்கும் எமது தனிப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ-களை எப்படி மறைத்து வைப்பது என்று கூறுகிறேன்.
முதலாவதாக உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் My Files அல்லது File Manager என்று இருக்கும் மெனு-இற்கு செல்லுங்கள்.
அங்கே Device Storage என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து மேலே வலது மூலையில் Settings-இற்கு சென்று Create Folder என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களால் நினைவில் வைத்து கொள்ள கூடியவாறான ஒரு பெயருடன் Folder-ஐ உருவாக்குங்கள்.
மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நீங்கள் உருவாக்கும் Folder-ன் பெயருக்கு முன்னால் ஒரு புள்ளியை வைத்து Folder-ஐ உருவாக்குங்கள். நான் கீழே காட்டி இருக்கும் படத்தை பார்த்தால் எப்படி Folder-ஐ உருவாக்க வேண்டும் என்பது உங்களுக்கு புரியும்.
Folder-ஐ உருவாக்கிய பின்னர் My Files-இனுள் இருக்கும் Image என்பதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே உங்களது Gallery-யில் இருக்கும் அனைத்து போட்டோகளும் காட்டப்படும்.
அடுத்து மேலே வலது மூலையில் காணப்படும் Settings-ஐ கிளிக் செய்து Select என்பதை கிளிக் செய்வதன் உங்களுக்கு தேவையான மறைக்க வேண்டிய போட்டோகளை தெரிவு செய்து கொள்ளலாம்.
தெரிவு செய்த பின்னர் மறுபடியும் மேலே வலது மூலையில் காணப்படும் Settings-ஐ கிளிக் செய்து Move என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து நீங்கள் புதிதாக உருவாக்கிய Folder-ஐ திறந்து Move Here என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது நீங்கள் மறைக்க நினைக்கும் போட்டோ-கள், நீங்கள் புதிதாக இருவாக்கிய Folder-இனுள் காணப்படும்.
அடுத்து My Files-இற்கு மறுபடியும் பின் வந்து மேலே வலது மூலையில் இருக்கும் Settings-ஐ கிளிக் செய்யுங்கள்.
அங்கே Show hidden files என்பதில் வழங்கப்பட்டிருக்கும் டிக்-ஐ எடுத்து விடுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்களது தனிப்பட்ட போட்டோகளை கொண்டுள்ள Folder ஆனது System Files ஆக கருதப்பட்டு மறைக்கப்பட்டு விட்டது.
மறைத்த போட்டோகளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்றால்
My Files-இற்கு வந்து மேலே வலது மூலையில் இருக்கும் Settings-இல் Show Hidden Files என்பதை டிக் செய்து விடுங்கள்.
இப்போது மறைந்த Folder-ஐ மறுபடியும் பார்க்க கூடியதாய் இருக்கும். இந்த முறையை பயன்படுத்தி உங்களது தனிப்பட்ட போட்டோ வீடியோ உட்பட உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து தரவுகளையும் மறைக்க முடியும்.
visit sites:
youtube channel: https://youtu.be/rx5bWE4nrv4
No comments:
Post a Comment