ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை இயக்க
முயற்சிப்பவரை போட்டோவுடன் கையும்
களவுமாக பிடிக்க வேண்டுமா?
இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் வெறும் ஸ்மார்ட்போன் மாத்திரம் அல்ல.
அது விலைமதிப்பற்ற எமது தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஒரு பெட்டகம் எனவும் குறிப்பிடலாம்.
எனவே ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு பயனுள்ள கருவியாக அமைந்தாலும் கூட துரதிஷ்டவசமான சில சந்தர்பங்களில் அது எமக்கு அச்சுறுத்தலாக அமைவதும் உண்டு.
இது போன்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகளானது எமது ஸ்மார்ட்போன் இன்னும் ஒருவரது கைகளுக்கு செல்லும்போதே இடம்பெறுகிறது.
எமது ஸ்மார்ட்போனை ஏனையவர்களால் பயன்படுத்த முடியாதவாறு அவற்றுக்கு கடவுச்சொல் இட்டு பயன்படுத்தினாலும் கூட அவற்றை ஊகித்து பயன்படுத்த முயற்சிப்பவர்களும் நம்மில் இல்லாமல் இல்லை.
எனவே எமது ஸ்மார்ட்போனை அவ்வாறு தவாறாக பயன்படுத்த முயற்சிப்பவர்களை கையும் களவுமாக பிடித்துக்கொள்ள உதவுகிறது Third Eye எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி. கீலுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிரக்கிக் கொள்ளலாம்.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தவறாக கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் ஸ்மார்ட்போனை இயக்க முயற்சிக்கும் போது குறிப்பிட்ட நபரை இந்த செயலி மூலம் கையும் களவுமாக படம்பிடித்துக் கொள்ளலாம்.
மேலும் தவறாக கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் ஸ்மார்ட்போனை யாராவது இயக்க முயற்சித்திருந்தால் அதனை நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்வதற்கான வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.
ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் சரியான கடவுச்சொல்லை உள்ளிட்டு இன்னுமொருவர் பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா? அவ்வாறன சந்தர்பங்களில் உங்கள் ஸ்மார்ட்போன் இறுதியாக அன்லாக் (Unlock) செய்யப்பட்ட நேரத்தை இந்த செயலி மூலம் அறியலாம். எனவே இந்த வசதியை வைத்தும் இன்னும் ஒருவரால் எமது ஸ்மார்ட்போன் உளவு பார்க்கப்பட்டிருக்கிறதா? என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்
visit sites:
youtube channel: https://youtu.be/rx5bWE4nrv4
Subscribtion Link: https://www.youtube.com/channel/UCXx_5-Y-kN7nnSgtHieXPvQ?sub_confirmation=1
No comments:
Post a Comment