ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய
வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்
அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது.
அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது. Next
மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாட்ஸ்அப் செயலியின் 2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் இதனை கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி APK மிர்ரர் தளத்தில் இருந்து இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.
இந்த வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகு. இருப்பினும் இதற்கான வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்வது எப்படி?
படி 1: முதலில் வாட்ஸ்அப் செயலியின் 2.16.230 எனும் பதிப்பை உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கு தரவிறக்கிக் கொள்க.
படி 2: பின்னர் வழமைபோல் வாட்ஸ்அப் செயலியை திறந்து பலருக்கு அனுப்பவேண்டிய ஒரு செய்தியை தெரிவு செய்க.
படி 3: இனி Forward செய்வதற்கான பட்டனை அழுத்தியதன் பின்னர் ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்புவதற்கான வசதி தோன்றும்.
படி 4: பின்னர் அதன் மூலம் தேவையான நபர்களையும் குழுக்களையும் தெரிவு செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு அந்த செய்தியை அனுப்பலாம்.
அவ்வளவுதான்.
பல புதுப்புது தகவல்களை உடனுக்குடன் அறிந்திட தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்முடன்.
More details
Subscribtion Link: https://www.youtube.com/channel/UCXx_5-Y-kN7nnSgtHieXPvQ?sub_confirmation=1
visit sites:
youtube channel: https://youtu.be/rx5bWE4nrv4
No comments:
Post a Comment